rtjy 291 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் சிறுமியுடன் திருமணம்; பெற்றோருடன் கைது

Share

யாழில் சிறுமியுடன் திருமணம்; பெற்றோருடன் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் சிறுமிக்கும், இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் இளைஞனின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அண்மையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து இருவரின் குடும்பத்தினருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது.

அதன் பின்னர் இந்த இளம் ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறுமியின் உறவை தொடர விரும்பவில்லையென்றும், சிறுமியின் குடும்பத்தினர் தொல்லை தருகின்றார்கள் என்றும் இளைஞனும், குடும்பத்தினரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார், அவர்களின் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

அத்துடன் சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான 21 வயதான இளைஞன், தாய், தந்தை ஆகியோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...