நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

24 6608b6d36346b

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை, பெப்ரவரி (29) நள்ளிரவில் எண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மார்ச் முதல் வாரத்தில் எண்ணெய் விலை திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version