தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்

நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டு தாக்குதலுக்குள்ளான இரு பெண்களும் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய பெண் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலில் காயமடைந்த பௌத்த பிக்கு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், நவகமுவ ஶ்ரீ சுமனராம விகாரைக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நவகமுவ ஶ்ரீ சுமனராம விகாரையில் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும்,குறித்த விகாரையில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லையெனவும் நவகமுவ பாதுகாப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version