25 693fffd1569ed
இலங்கைசெய்திகள்

2025 மூன்றாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி: 5.4% வலுவான வளர்ச்சி பதிவு!

Share

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வீதம் 5.4% ஆகப் பதிவாகியுள்ளது எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics – DCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளின் வலுவான செயல்திறன் இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது.

அதன்படி, இந்த காலப்பகுதியில், விவசாய நடவடிக்கைகள் 3.6% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. அதேநேரம், கைத்தொழில் நடவடிக்கைகள் 8.1% என்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளன.

அத்துடன்,, சேவைத்துறை 3.5% வளர்ச்சி அடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 4.9 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...