19 8
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

மியன்மாரில் (Myanmar) உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

நேற்று (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”குறித்த பகுதியில் சிக்கியிருந்த பலர் ஏலவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும் இந்த பிரச்சினை தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது.

இலங்கையிலிருந்து பலர் வெவ்வேறு வழிகளின் ஊடாக மியன்மாருக்குத் தொடர்ந்தும் செல்கின்றனர். அங்குள்ள சில பகுதிகளை உத்தியோகபூர்வமற்ற இராணுவ தரப்பினர் கட்டுப்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் அங்குள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், இவ்வாறான மனித கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்”என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...