இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

rtjy 101

இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் அந்நிய செலவாணியாக கிடைத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2215 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.

அதே வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் பணம் அனுப்பியதில் 74.4% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Exit mobile version