ஜோர்தானிய எல்லையூடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது!

11 21

ஜோர்தானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் பள்ளத்தாக்கு சமூகத்தில் வசிக்கும் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த குறித்த இரண்டு சட்டவிரோத வெளிநாட்டினர், உள்ளூர்வாசியிடம தண்ணீர் கேட்டதுடன், தமது தொலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்து தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்தநிலையிலேயே அவர் சந்தேகப்பட்டு, இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு ஊடுருவல்காரர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version