அவுஸ்ரேலியாவில் தாக்குதல் : உயிருக்கு போராடும் இலங்கை மாணவன்

24 665ec05fa7da3

அவுஸ்ரேலியாவில் தாக்குதல் : உயிருக்கு போராடும் இலங்கை மாணவன்

அவுஸ்திரேலியா(australia)வின் பேர்த்(perth)தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

28 வயதான கீத் மதுஷங்க(Geeth Madushanka), என்ற இலங்கை இளைஞனே தாக்கப்பட்டவராவார்.

பெர்த்தில் அமைந்துள்ள லாங்போர்டில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மே 25 அன்று இரவு 10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலாளி 30 வயதான Cyril Benedict Garlett என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதுஷங்காவின் முகத்தில் தள்ளி, பின்னர் குத்தியதாகவும் அவர் விழுந்து தலையில் அடிபட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

அன்றைய தினம் கார்லெட் ஏற்கனவே மற்ற இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெப்ரவரியில் இருந்து பெர்த்தில் படித்து வரும் மதுஷங்கா, சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகும் ரோயல் பெர்த் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

அவரது அன்புக்குரியவர்கள் GoFundMe இல் அவரது சிகிச்சைக்காக பணம் திரட்டுகிறார்கள். இதுவரை $9,000 திரட்டியுள்ளனர்.

கார்லெட் மீது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதல் மற்றும் சொத்து அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Exit mobile version