நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

tamilnih 14

விவசாய கைத்தொழில் துறையில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்னர் விவசாய தொழில்முனைவோராக மாற்றுவதற்கு காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் விவசாய கைத்தொழில் துறை தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெற்ற அறிவின் ஊடாக இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் வகையில் இந்த காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் இலங்கையின் விவசாய கைத்தொழில் துறையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் விவசாயத்துறையுடன் தொடர்புடைய புதிய வர்த்தகர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் அமைவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version