இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு அதிகரிப்பு

24 6639dc1f0fdcf

இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் (Sri lanka) உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.6% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பு 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (Us Dollar) பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நீடித்து நிலைத்திருக்கும் உறுதிப்பாடு என்ற தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா (China) வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version