deccanherald 2024 04 864d8476 144c 4ea8 9b6b 54ed38a21ed1 file7utq9izjl7l1b7rmwhgz
இலங்கைசெய்திகள்

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்குத் திரும்பிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது – இந்திய ஊடகங்கள் தகவல்!

Share

இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் மீதான வழக்குகள் முடிவடைந்த நிலையில், அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார். இதற்காகவே அவர் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து படகு ஒன்றில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...