18 14
இலங்கைசெய்திகள்

தமிழின அழிப்பு நினைவுத் தூபி: கனேடிய தரப்பிடம் இலங்கை அரசு கடும் ஆட்சேபனை

Share

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கனடாத் தூதுவரை இன்று அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

“ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்,அது தொடர்பில் நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன்.

இலங்கையின் பன்முகதன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.

இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவுக்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகின்றது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது” என்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...