இலங்கையிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள்

tamilni 301

இலங்கையிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள்

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டமொன்று திருத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு முரளிதரன் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள் என்றும் உருக்கம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (21.09.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் என் சகோதரர் அர்ஜுன ரணதுங்கவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் கவனித்து கொண்டார்.

அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கேப்டன் கூட அவ்வாறு செயற்படவில்லை. அதை செய்யவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள். அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version