சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

tamilni 148

சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை படுகொலை செய்து விட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஷான் தாரக கோட்டகே என்ற நபர் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

32 வயதான செவ்வந்தி மதுகா குமாரி என்ற பெண்ணே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version