24 66948ca833e39
இலங்கைசெய்திகள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் உயிரிழந்த தாய் – மகன்

Share

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் உயிரிழந்த தாய் – மகன்

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார்.

மகன் உயிரிழந்த தினத்திலேயே தாயாரும் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

மகனின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் 12:00 மணியளவில் மெல்போர்னில் நடைபெறவுள்ளன.

உயிரிழந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்று மாலை 5.00 மணிக்கு களனி, பிலப்பிட்டிய மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மகனுக்கு 40 வயதாகின்ற நிலையில் தாயாருக்கு 68 வயதென தெரியவந்துள்ளது.

இதேவேளை, லக்ஷ்மன் சுனில் விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெத்தியகொட அமைப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் சோகம்: இருவேறு விபத்தில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி...

images 2 4
இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்கு தவணைப் பரீட்சை இரத்து: கட்டாயம் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு உத்தரவு!

நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத்...

25 692d3ddd5bdcd 920x425 1
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தொடர் மழை: முத்துஐயன்கட்டுக் குளத்தின் கதவுகள் திறப்பு – சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால், மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள...