சிக்கலுக்கு உள்ளாகியுள்ள தொடருந்து பராமரிப்பு பணிகள்
தொடருந்து பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) கவலை வெளியிட்டுள்ளார்.
தொடருந்து சேவை தொடர்ச்சியாக நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில், பேருந்துகள் இல்லாத சாலைகளில் குழந்தைகள் பாடசாலைக்கும் மருத்துவமனைக்கும் செல்ல இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது.
கடன் வாங்காவிட்டால், அரசாங்கத்தினால் பேருந்துகளை வாங்க முடியாது.
எங்களிடம் 60 தொடருந்துகள் உள்ளன. 70 வருடங்களாகியும் இதற்கு தீர்வு இல்லை” என கூறியுள்ளார்.