எல்ல நகரில் குவியும் சுற்றுலா பயணிகளால் மகிழ்ச்சி
எல்ல நகருக்கு இந்த நாட்களில் பாரியளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத்தருவதாக தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையால் வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடிமணிக்கே ரயிலில் எல்ல நகருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.