கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றம்

24 65fb8fc4a10fd

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றம்

விமான பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவன தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமான பயணிகள் விமான நிலைய சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு, இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திய மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக காணப்பட்டுள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version