இலங்கையில் மற்றுமொரு சுற்றுலா தலம்! தீவிரமாகும் அபிவிருத்தி

24 6623291653a01

இலங்கையில் மற்றுமொரு சுற்றுலா தலம்! தீவிரமாகும் அபிவிருத்தி

மத்திய மாகாணத்தின் கடுகண்ணாவை நகரையும் அதனை சூழவுள்ள பகுதியையும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலா திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேம சிங்க இந்த இடத்தை அவதானித்துள்ளார்.

இதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய மாகாண சுற்றுலா திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நேற்று(19) மேற்கொண்டுள்ளார்.

இதன் கீழ் கடுகண்ணாவை கல் துளையிடும் தளம், டாசன் டவர், கடுகண்ணாவை விடுதி, கடுகண்ணாவை தொடருந்து அருங்காட்சியகம் மற்றும் உர சேமிப்பு வளாகத்தை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை முதலிவத்தை கிராமத்தை விருந்தோம்பல் கிராமமாக அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version