இலங்கையில் மாயமான டென்மார்க் பெண்
கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கண்டி சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி முதல் 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவந்துள்ளது.
காலை 8.30 மணியளவில் கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள மலையில் ஏறுவதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து வெளியேறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலை ஏறப் போவதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் ஹோட்டலுக்கு வரவில்லை என விடுதியின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன இந்த வெளிநாட்டுப் பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.