இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!

Share

இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறை மூலமாக இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 986.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தினை இலங்கை சுற்றுலாத் துறை மூலமாக ஈட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் வருடாந்தம் 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூன் மாதத்தில் 100,388 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 648,775 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...