25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

Share

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில் நடைபெற்றது.

நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை தூதுக்குழுவின் பங்கேற்புடன் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, 2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று வோசிங்டனில் முதல் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...