விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!

Share

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!

இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பாதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அதாவது தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளன. ஆனால் இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது.

டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிக்கை சமர்ப்பித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை பொய் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டு உண்மையை மறைத்து விட்டது. நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...