மயானத்தில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களில் வரி இலக்கங்கள்

tamilni 385

மயானத்தில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களில் வரி இலக்கங்கள்

கொழும்பு, பொரளை மயானத்தின் கல்லறைகளிலுள்ளவர்களின் அடையாள அட்டை இலக்கங்களுக்கும் வரி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

போலி வரி இலக்கங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கச்சாவடி மூலம் விடுவிக்கப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஒரு பொருளை இறக்குமதி செய்யும் போது சுங்கத்திலிருந்து நீக்குவதற்கு வரி இலக்கம் தேவைப்படுகின்றது.

அதற்கமைய, அவ்வாறு கிடைக்கும் அந்த வரி இலக்கங்கள் போலியானவை என தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட பொருட்களின் பெறுமதிக்கு ஏற்ப முதன்முறையாக இறக்குமதி செய்வதற்கு தற்காலிக வரி இலக்கமொன்று தேவைப்படுவதாகவும், அந்த வரி இலக்கங்கள் போலியாக உருவாக்கப்பட்டு அந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version