நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், டென்மார்க் சுமார் 39 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைப்பதன் மூலம் இலங்கைக்கான கடன் நிவாரணத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் (OCC) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) முடிவடைந்த பின்னர் இருதரப்பு விவாதங்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், டென்மார்க் 39 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைப்பதன் மூலம் இலங்கைக்குக் கடன் நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில்,நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷண சூரியப்பெரும, வெளியுறவு அமைச்சர் திரு. லார்ஸ் லோக்கே ராஸ்முஸன், ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கை அரசாங்கம் டென்மார்க்கின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

