2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு

24 662796949d584

2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும் 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version