29 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து 18 இலட்சம் பேரை களமிறக்குவாரா அநுர

Share

வெளிநாட்டில் இருந்து 18 இலட்சம் பேரை களமிறக்குவாரா அநுர

அநுரகுமாரவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 8தினங்களே இருக்கும் நிலையில் குறைந்தது 10 இலட்சம் பேராவது வருவார்களா என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச முன்னர் இருந்ததைவிட பின்தள்ளப்பட்டு தோல்வியின் விளிம்புக்கு சென்றுள்ளனர். இவர்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் சேறு பூசும் பிரசாரமே செய்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்று எவ்வாறு முன்னேற்றுவது என்ற திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.

நிவாரணம் வழங்கும் திட்டமே இவர்களிடம் இருக்கின்றன. அதனையே அவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி செயற்கையான மக்கள் அலை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ஆட்சியை கைப்பற்றுவதாக மக்களை ஏமாற்றி வருகிறது.

இவர்களின் இந்த போலி பிரசாரம் தற்பாேது அம்பலமாகி இருப்பதால், இவர்களுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. அதனால் இவர்கள் தற்போது மக்களை அச்சறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்த கருத்தே மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான சுயரூபம். அநுரகுமார திஸாநாயக்கவின் தீவிர ஆதரவாளர்களும் மக்களை அச்சுறுத்தும் காட்சிகள் தற்போது சமூகவலைத்தலங்களில் பரவி வருகின்றன.

வெளிநாடுகளில் இருக்கும் இவர்களின் ஆதரவாளர்களே இதனை செய்து வருகின்றனர். மேலும் அநுரகுமாரவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளார்கள் என கேட்கிறோம்.

தேர்தலுக்கு இன்னும் 8தினங்களே இருக்கும் நிலையில் குறைந்தது 10 இலட்சம் பேராவது வருவார்களா? அவ்வாறு வருவதாக இருந்தால் அவர்களுக்கு விசேட விமான சேவை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அதனால் இது சாத்தியமில்லாத விடயமாகும்.

எனவே இவர்களின் பொய் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் தற்போது விளங்கி வருகின்றனர். அதேபோன்று நாட்டை யாருக்கும் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மை நிலையையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

அதனால் தேசிய மக்கள் சக்தியின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் சரியப்போவதில்லை. எவ்வாறான அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைத் தடுக்க முடியாது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் எதிர்வரும் 21ஆம் திகதி புள்ளடி மூலம் பதிலளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...