2 33
இலங்கைசெய்திகள்

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

Share

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) ஆட்சிக்குக் கொண்டுவந்தபோது நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அவரை ஜனாதிபதியாக்க நாட்டு மக்கள் முடிவு செய்தனர். அவரிடம் அரசியல் அனுபவம் இல்லாததால், அவரால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் கையாள்வதில் அனுபவம் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாதத்தால் 2022க்குப் பிறகு பலரால் அரசியல் செய்ய முடியவில்லை. எனினும் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை என்ற நிலையுள்ளது. எனவே, அரசியலை மக்கள் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளனர்.

மக்களின் வித்தியாசமான எண்ணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதை அங்கீகரித்தோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்திலும் அவருக்கு ஆணை கிடைக்க வேண்டும். அதன்படி அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...