ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்

24 660383a0c1f9a

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனின்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version