மக்கள் பக்கமே ரணில்!

மக்கள் பக்கமே ரணில்!

மக்கள் பக்கமே ரணில்!

மக்கள் பக்கமே ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் பக்கமே நின்று தீர்மானங்களை எடுத்து வருகின்றார். அவரின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு வழங்குவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சிப்பவர்கள் முதலில் தங்கள் முகங்களைக் கண்ணாடிகளில் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவடைவார்கள்.

அதல பாதாளத்தில் வீழ்ந்த எமது நாட்டை ரணில் அரசு மீட்டு வருகின்றது. அதைக் குழப்பியடிக்கும் விதத்தில் எதிரணிகள் செயற்பட்டு வருகின்றன.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் பக்கம் நின்று தீர்மானங்களை எடுத்து வருவதால் அவர் வெற்றியடைந்தே தீருவார்.”என தெரிவித்துள்ளார்.

Exit mobile version