ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில்

tamilnaadi 32

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைத்து செயற்படுவது இந்தக் குழுவின் பிரதான கடமைகளில் ஒன்றாகும்.

இதற்கு மேலதிகமாக கட்சியின் பிரசார பொறிமுறையும் இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முகாமையாளர் லசந்த குணவர்தன, கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத் மற்றும் செயற்குழு உறுப்பினர் கிரிஷான் தியோடர் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் பல குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

Exit mobile version