12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

Share

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவையும் கொள்கை ரீதியாக தங்களுக்கு இடையில் கூட்டு அமைத்து உடன்பாடு கண்டிருக்கின்றன எனப் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக ஆதரவு கேட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பியின்) தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

யாழ். சுன்னாகம் – கந்தரோடையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில், பெரும்பாலும் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பங்குபற்றுவார் எனத் தெரியவந்துள்ளது.

”சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று செவ்வாய்க்கிழமை என்னைத் தேடி வந்து எங்கள் யாழ். அலுவலகத்தில் சந்திக்க விரும்பினர். இல்லை, நான் உங்களை வந்து சந்திக்கின்றேன் என்று பதிலளித்து அங்கு சென்று சந்திக்க இருக்கின்றேன்.

என்னவாயினும் அவர்கள் என் பழைய நண்பர்கள். எங்களுக்குள் தொடர்புகள் இருக்கின்றனதானே?” – என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், மேற்படி சங்கு – சைக்கிள் கூட்டணியின் வேறு பிரமுகர்கள் பங்குபற்றுவார்களா என்பது தெரியவில்லை.

கொள்கை ரீதியில் சங்கும் சைக்கிள் தரப்பும் ஒன்றிணைந்து விட்டமையால் சைக்கிள் தரப்பின் இணக்கத்தோடுதான் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகத்தை அமைக்க ஆதரவு கேட்கும் இந்த முயற்சியை சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னெடுக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...