24 660a1d155a5f5
இலங்கைசெய்திகள்

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

Share

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தங்காலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தை இறுதி நேரத்தில் புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மகிந்தவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.

அதனை பகிரங்கமாக அறிவிக்காத பொதுக் கூட்டங்களில் அவர்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் என அவர் வலியுறுத்திள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக நாமலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் தாவியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...