tamilnaadi 128 scaled
இலங்கைசெய்திகள்

விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம்! கொந்தளிக்கும் தேரர்

Share

விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம்! கொந்தளிக்கும் தேரர்

நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு களனியில் ஏற்பாடு செய்திருந்த மஹா சங்க சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியல்மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

காலத்துக்கு தேவையான மழை பெய்து விவசாயம் செழிப்புற்று நல்ல அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அரச பொறிமுறைகள் தர்மத்துடன் செயற்ட வேண்டும். நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்பனை செய்து, அதனை செய்ய முடியாது.

நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு விற்பனை செய்தால் எமது நிர்வாணம் முழு உலகுக்கும் வெளிச்சமாகும். அதனால் எமது மேலான கலாசாரத்தை பாதுகாத்துக்கொள்வதே எமக்கு முக்கியமாகும்.

அத்துடன் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றமாகும். அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...