tamilni 307 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி!

Share

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி!

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள், தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,”கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ச எங்கு சென்று மறைந்தார்? திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.

கொழும்பிலிருந்த பசில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல், தந்தையுடன் முகாமிற்கு சென்றார். கோட்டாபய மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார். இவை அனைத்தும் நினைவிருக்கிறதா?

ஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மகிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா? மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர். காட்டுச்சட்டமே நாட்டில் உள்ளது. குற்றவாளிகளே ஆட்சியில் உள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

மகிந்த, கோட்டாபய, பசில், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...