ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கோரிக்கைகள்

rtjy 62

ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கோரிக்கைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உடன் நடைமுறைப்படுத்துமாறு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குதல், உரமானியத்தை தொடர்ந்தும் வழங்குதல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட மறு ஒதுக்கீடு மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது தொழில் இழப்புகளை தவிர்த்தல் ஆகிய நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி திட்டம. எனவே இந்த திட்டத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமற்றது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version