கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

19 2

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை (05) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version