25 688e11fb14f86
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கை பொலிஸ் திணைக்களம் Sri Lanka Police eTraffic App ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை பொதுமக்களில் 13000 பேர் இந்த Sri Lanka Police eTraffic Appயை தரவிறக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களில் அதிகளவான பொது மக்கள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக கொழும்புக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களில் மரணிப்போரின் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படுகிறது.

ஆகையால் அனைவரும் குறித்த Appயை தரவிறக்கம் செய்து நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அதிக வேகமாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் அல்லது சாரதிகளின் காணொளி, புகைப்படம் ஒன்றை எடுத்து இந்த Appயில் தரவேற்றம் செய்தால் பொலிஸ் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...