tamilni 393 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் துப்பாக்கி சூடு

Share

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் துப்பாக்கி சூடு

அக்குரஸ்ஸ தெடியகல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் அக்குரஸ்ஸ தெடியகல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ தீகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று இரவு அக்குரஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...