மகிந்தவிற்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு: காத்திருக்கும் உறுப்பினர்கள்

22 637880bc3b68c

மகிந்தவிற்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு: காத்திருக்கும் உறுப்பினர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை அறிவிக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahindha Rajapaksha) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நேற்று கொழும்பில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தலைமையில் கூடிய போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version