ஆதரவை திரும்பப் பெற்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார்

1 11

ஆதரவை திரும்பப் பெற்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் என்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Exit mobile version