கல்வி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவினாலேயே விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடை செய்து சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் இவ்வாறு பரிசுகளை பெறுவதும் தவறு என கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.