தன்னை பற்றி மாத்திரமே சிந்திக்கும் சஜித்: முன்னாள் அமைச்சர் சாடல்
“சஜித் பிரேமதாஸ இந்த சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவோம் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்குச் சேவையாற்றியிருக்கின்றார் என்பதை 22 இலட்சம் மக்கள் உணர்ந்துள்ளனர். ஏனைய 42 சதவீதமானோர் நாட்டில் மாற்றமொன்று வேண்டும் எனத் தீர்மானித்துள்ளனர்.
அந்த மக்கள் ஆணைக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். ஏனையோரைப் போன்று நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நாம் அல்லர். யார் ஆட்சி செய்தாலும் நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
ஆனால், நாடு வீழ்ச்சியடைந்தபோது சஜித் பிரேமதாஸ பொறுப்புக்களை ஏற்கவில்லை. அவ்வாறான ஒருவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. அதற்கான பலமிக்க தலைவராகவும் நான் அவரைப் பார்க்கவில்லை என்றார்.
- Anura Dissanayake
- anura kumara
- anura kumara dhisanaayake
- anura kumara disanayake
- Anura Kumara Dissanayaka
- anura kumara dissanayaka satana
- Anura Kumara Dissanayake
- anura kumara dissanayake live
- anura kumara dissanayake won
- anura kumara dissanayakke
- anura kumara dissanyaka
- anura kumara live
- anura kumara parliament
- anura kumara president
- anura kumara satana
- anura kumara speeches
- anura kumara today
- live anura kumara