tamilnih 2 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இலக்கு: அநுரகுமார

Share

சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இலக்கு: அநுரகுமார

நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது. எனவே இலங்கை அந்த நாட்டிடம் இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும். அதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை. சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது. எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்குச் செல்வதற்காகவோ அல்லது இராஜதந்திர சந்திப்புகளுக்காகவோ, தேசிய மக்கள் சக்தி அதன் அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றக்கொள்ளாது என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை தமது கட்சியின்; சொந்த நிகழ்ச்சி நிரலின்படி தேசியத் திட்டத்திற்கு ஏற்ப இந்தியாவின் ஆதரவைப் பெற முடியும் என்று தாம் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார  திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...

08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...

07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...