யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 26 கிலோ 900 கிராம் (27 கிலோ) எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கஞ்சா தொகை மீட்கப்பட்டது. கடற்படையினரின் மதிப்பீட்டின்படி, கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் (60 இலட்சம்) அதிகம் ஆகும்.
கைப்பற்றப்பட்ட இந்தக் கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உரியப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

