rtjy 169 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

Share

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் டுபாய் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

காலி நகரின் பிரபல வர்த்தகரான 60 வயதான லலித் வசந்த, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காலி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசாரணைகளின் போது, ​​கொல்லப்பட்ட லலித் வசந்த, ரத்கம விதுர என்ற பாதாள உலகத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளது.

காலி நகரில் உள்ள தனது ஆடை கடையில் பணியை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் லலித் வசந்தவை டி56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...