இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய உரையை ஐப்பானிய மக்கள் மறக்க மாட்டார்கள்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன J. R. Jayawardena இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.
இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, விசேட கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணிலுடனான கலந்துரையாடலுக்கு பின்னர், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா மற்றும் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இணைந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
Leave a comment