மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை
இலங்கைசெய்திகள்

மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை

Share

மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை

மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இவ்வாறு இலங்கை மிகக் குறைந்த வருமானம் கொண்ட நாடாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெரிடே ரிசர்ச் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகிக்கிறது எனவும் இந்த ஆண்டு வரி வருவாய் மூவாயிரத்து 130 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயிரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபா மாத்திரமே உண்மையான வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட்டுமே ஈட்டமுடியும் எனவும் வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...