புலிகள் மீதான தடை தொடர்பில் இலங்கை அரசின் வர்த்தமானி வெளியானது

25 683aaaf213c5c

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பட்டியலை புதுப்பித்து நேற்று (மே 30) புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் இந்த “அதி விசேட வர்த்தமானி” (Gazette Extraordinary) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புலிகள் மீதான தடை தொடர்பில் இலங்கை அரசின் வர்த்தமானி வெளியானது | Ltte Further Banned In Lanka

இதில் தற்போது 15 அமைப்புகள் மற்றும் 217 தனிப்பட்ட நபர்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் 15 அமைப்புகள் மற்றும் 222 நபர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர்.

புதிய பட்டியலில் விடுதலைப்புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamil Rehabilitation Organisation – TRO), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து தடைப்பட்டவையாகவே இருந்து வருகின்றன.

இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Exit mobile version