tamilni 348 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை

Share

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு மாதம் 20000 கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76000 ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 28000 ரூபாவாக உள்ளது. இதன் காரணமாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை மாதாந்தம் 20000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அடுத்த வாரம் அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

அடிப்படை சம்பளம், ஆரம்ப சம்பள கொடுப்பனவுகளை சேர்த்தாலும் 30,000 ரூபாய் மாதாந்த சம்பளம் பெற முடியாது .

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 15 லட்சம் பேரில் வாழ்வதற்கு போதிய மாத சம்பளம் இல்லாமல் 13 லட்சம் பேர் அரச சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில அரச உத்தியோகத்தர்கள் உணவிற்காக காய்கறிகள் மற்றும் சோறு மாத்திரமே வேலைக்கு கொண்டு செல்வதாகவும், இது மிகவும் பரிதாபகரமான நிலை.

எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் அதிகரிக்கும் வரை உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...